malayappa samy thiruveedhi ula

மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை ஒட்டி மலையப்பசாமி திருவீதி உலா நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மலையப்பசாமி கோவில் முன் மண்டபத்தில்  எழுந்தருளும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலை மலையப்ப சாமி சின்னசேஷ வாகனம் ஸ்தாபன திருமஞ்சனம் அன்னபட்சி வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த நிலையில் மாலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மலையப்ப சாமி அலங்கார கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஊஞ்சல் உற்சவத்தின் போது வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓதி மலையப்ப சாமியான ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து அண்ண பட்ஷி வாகனத்தில் எழுந்தருளி மலையப்பசாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. கோவில் முன்பு இருந்து துவங்கிய திருவீதி உலா நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலில் முடிவுற்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *