then thirupathy bramorchavam

சிறுமுகை அருகே ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை ஒட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மலையப்பசாமி கோவில் முன் மண்டபத்தில்  எழுந்தருளும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக காலை மலையப்ப சாமி சின்னசேஷ வாகனம் ஸ்தாபன திருமஞ்சனம் அன்னபசி வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த நிலையில் மாலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மலையப்ப சாமி அலங்கார கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்

ஊஞ்சல் உற்சவத்தின் போது வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓதி பக்தர்கள் மலையப்ப சாமியான ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *