Sirkazhi narayana perumal koil kumbabishegam

சீர்காழி அருகே 19 ஆண்டுகளுக்கு பிறகு பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்கள் ஒன்றான ஸ்ரீ நாராயண பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் 108 திவ்ய தேசங்களில் 39வது திவ்ய தேசமாக இக்கோவில் அமைந்துள்ளது. புண்டரீகவல்லி தாயார் சமேத நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற ஸ்தலமான இங்கு 11 கருட சேவை நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இங்கு கடந்த 13 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 14 ஆம் தேதி யாகசாலை பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன 17 ஆம் தேதியான இன்று காலை ஏழாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா  அலங்கார தீபாராதனை நடைபெற்றது.  பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தனர் பின்னர் பட்டாச்சாரியார்  விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்தி வைத்தனர்.  கும்பாபிஷேகத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. மீனா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *