Navathirupathy garudasevai

நவதிருப்பதி தலமான அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயிலில்  ஆவணித்திருவிழா 5ம் நாள் கருடசேவை. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், நவதிருப்பதிகளில் 8 வதும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம் திருக்கோளுா்.  நவக்கிரகங்களில் இது செவ்வாய் க்கு அதிபதியான தலம் . நிதியை இழந்த குபேரனுக்கு அவன் இழந்த செல்வத்தை தேடி எடுத்துக்கொண்டு, குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள்பாலித்த தலம்.

இங்கு அருள்பாலித்து வரும் வைத்தமாநிதி பெருமாள் தலைக்கு மரக்கால் கொண்டு சயன திருக்கோலத்தில் காட்சி தருகின்றாா். சுவாமி இராமானுஜா் இத்தலத்தில் வாழ்வதை பெறும்பேறாக கருதிய தலம்.  குருவை போற்றுதல் தெய்வத்திற்கு சமம் என்று கண்ணினுன் சிறுத்ததாம்பு இயற்றிய ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம்.

சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோயிலின் ஆவணி பெருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றம் நடைபெற்று 12 தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. திருவிழாக்காலங்களில் தினமும் காலை, மாலை சுவாமி வைத்தமாநிதிப்பெருமாள் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. சிறப்பாக  ஐந்தாம் திருநாளானஇன்று  கருடசேவை  நடைபெற்றது.  இதற்காக மாலையில் சுவாமி மதுரகவிஆழ்வாா் அன்ன வாகனத்திலும்  சுவாமி வைத்தமாநிதி பெருமாள்  திருவடியாம் கருடாழ்வார் மீது சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளினா்.

ஆச்சார்ய கோஷ்டியின் பிரபந்த பாராயணத்துடன் குடைவாயில் தீபாராதனை நடைபெற்றது.  கோஷ்டியார் பிரபந்த பாராயணம் பாடியபடி  பெருமாள் முன்செல்ல கருடவாகன புறப்பாடு நடைபெற்றது. பக்தா்கள் பஜனை பாடல்கள் பாடி பின் சென்றனா். திரளான பக்தா்கள் கருடசேவை நிகழ்வினை தரிசனம் செய்தனா்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *