Veeralakshmi amman koil festival

பழனியருகே வீரலட்சுமி அம்மன் கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

பழனிஅருகே புதுஆயக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரலட்சுமி அம்மன் திருக்கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. குறும்பர்கள் எனப்படும் ஆரியகுல பங்காளிகளின் குலதெய்வமாக விளங்கும் ஸ்ரீ வீரலட்சுமி அம்மன் திருக்கோவிலில் கடந்த ஆடிமாதம் 30ம்தேதி திருவிழா துவங்கியது‌.

15ம்நாளான இன்று ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *