Karur Nayanmar vizha

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமான் பெருமாள் நாயன்மார் குருபூஜை விழாவில் குதிரை யானை வாகனத்தில் சுவாமிகள் திருவீதி உலா.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமாள் நாயன்மார்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு காலை சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து இரவு நாயன்மார்களின் திருவீதி உலா ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க புறப்பட்டது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் யானை வாகனத்திலும், சேரமான் பெருமாள் நாயர்மார் குதிரை வாகனத்திலும் திருவீதி உலா காட்சியளித்தனர்.

சுவாமி நாயன்மார்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. ஆலயம் குடி புகுந்த நாயன்மார் சுவாமிகளுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டினார்.

கரூர் கல்யாண பசுபதீசுவரர் ஆலயத்தில் நடைபெற்ற நாயன்மார் குருபூஜை விழா திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *