Kanchi Garudasevai Urchavam

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில்  கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும்,கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்றதுமான வைகுண்ட பெருமாள் திருக்கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மஞ்சள் பட்டு உடுத்தி திருவாபரணங்கள், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருள செய்தனர்.

பின்னர் கருட வாகனத்தில் காட்சியளித்த வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளம் முழங்க காஞ்சி மாநகரின் நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா வந்தார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து கோவிந்தா கோவிந்தா என பக்தி  முழக்கமிட்டு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். மேலும் இந்த கருட சேவை உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *