Kanchi perumal

திருவோண நட்சத்திரத்தையொட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள்,  ஸ்ரீபெருந்தேவி தாயாருடன் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோயில் நகரத்தின் திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு திருவோண நட்சத்திரத்தை ஒட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி திருவடி கோயில் வரை சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்த பின் , ஸ்ரீ பெருந்தேவி தாயார் ராஜகோபுரம் முன்பு ஸ்ரீ வரதராஜ பெருமாள் முன்பு தோன்றி இரட்டை புறப்பாடு மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆலயம் வலம் வந்து மீண்டும் சன்னதிக்கு சென்றனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் ஸ்ரீ பெருந்தேவி தாயாரை சேவித்து அருள் பெற்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *