Varahi Devi Vazhipadu

முடிந்த ஐந்தாம் நாளும், பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும். இது ஓர் மகத்தான திதி என்று சொல்லப்படுகிறது. பஞ்சமி திதியில் வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.

குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாகச் செய்து தேவியை வணங்கலாம்.

மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு. சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி.

வாராஹி மஹா மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஷ்ரீம்
ஐம் க்லெளம்  ஐம் நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி வாராஹி
வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்திணி நம:
ருந்தே ருந்தினி நம:
ஜம்பே ஜம்பிணி நம:
மோஹே மோஹினி நம:
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
ஸர்வ வாக்சித்த சக்ஷீர் முக கதி
ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லெளம்
ட: ட: ட: ட: ஹீம் அஸ்த்ராய பட் நம

வாராஹி மூல மந்திரம்

ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹ…

வாராஹி காயத்ரி மந்திரம்

ஓம் மஹிஸத்வஜாயை  வித்மஹே
தந்தஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹீப் பிரசோதயாத்

வாராஹி மஹா மந்திரத்தை தொடர்ந்து  26 நாட்கள், 108 முறை பாராயணம் செய்யுங்கள்.  வீடு மற்றும் நிறுவனம் இம் மந்திரத்தை ஒலி பேழையில் ஒலிக்க செய்யுங்கள். உங்கள் எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள்.  செல்வ நலனும், உடல் ஆரோக்கியமும், தொழிலில் மேம்பாடும், மன நிம்மதியும் வாராஹி அம்பிகை அருள் புரிவார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *