Swamy malai car festival

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள்  வடம் பிடித்து அழைத்துச் சென்றனர்

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் ஆறு படைவீடுகளில் நான்காம் படை வீடாக திகழ்கிறது சித்திரை பெருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தினமும் சுவாமிகளின் திருவீதியுலாவும் ஒன்பதாம் விழாவாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.

 வள்ளி தேவசேனா சமேத முருகபெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார்கள் இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து சுவாமிநாதா – சுவாமிநாதா என பக்தி முழக்கமிட்டவாறு திருத்தேரினை அழைத்து சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *