Kanchi egambaranathar

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெரு விழாவின் 8-ஆம் நாள் இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்த ஏகாம்பரநாதர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கக்கூடியதும்,உலக  புகழ் பெற்றதுமான  கோவில் நகரமான  காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி  கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் எட்டாம் நாள் இரவில் ஏகாம்பரநாதரும், ஏலவார்குழலி அம்பாளும் குதிரை வாகனத்தின் மீது எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு குதிரை வாகனத்தின் மீது அமர்ந்தபடி ஏகாம்பரநாதரும் ஏலவார்குழலி அம்பாளும் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தனர்.

நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரசவத்துடன் வேண்டி விரும்பி  வணங்கி வழிபட்டு சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *