Thiruvalangadu kodiyetram

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா துவங்கியது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா வெகுவிமரிசையாக நடைப்பெறுவது வழக்கம்.

இந்நிலையில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து, 10 நாட்கள் காலை, இரவு உற்சவர் வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மன் திருவாலங்காடின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின், 7ம் நாளான ஏப்., 1ம் தேதி கமலத்தேர் விழா நடைப்பெற உள்ளது. இதையடுத்து, ஏப்., 6ம் தேதி இரவு, 10:00 மணிக்கு காரைக்கால் அம்மையார் ஊஞ்சலும், 7ம் தேதி இரவு, 10:00 மணிக்கு காரைக்கால் அம்மையார் திருவீதியுலாவும் நடைப்பெறும் பின் அன்றிரவு காரைக்கால் அம்மையார் ஐக்கிய காட்சி நடைப்பெறும்.

10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து செல்வர் என்பதால் திருத்தணி கோவில் அதிகாரிகள் விழாவிற்கான ஏற்பாட்டை செய்து வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு பின் மூன்றாண்டுகள் கழித்து பங்குனி உத்திர விழா நடைப்பெறுவதால் உள்ளூர் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *