walaja koil kodiyetram

வாலாஜாபேட்டை அருகே உள்ள காமாட்சி அம்மன் ஸமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் சுவாமி திருகோவிலில் இன்று பங்குனி மாத  பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது பிறகு பிரம்மோற்சவ கொடிமரத்திற்கு சிவாச்சாரியார்கள்  மஞ்சள், பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்களை செய்து சாம்பிராணி தூவியவாரு மங்கள  தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பிறகு சிவாச்சாரியார்கள் கொடிமரம் முன்பாக வேதமந்திரங்கள் ஓதியபடி சுமார் 50 அடி உயரமுள்ள கொடிமரத்தில் , மங்கல வாத்தியங்கள் மற்றும் சிவவாத்தியங்கள் முழங்க, கொடியேற்றப்பட்டு  மஹா தீபாரதனை காட்டப்பட்டது.

பின்னர் கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் நமச்சிவாய சிவாய நம என  விண்ணதிர பக்தி முழக்கம் எழுப்பியவாறு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *