Namakkal kumbabishegam

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த குட்டமூக்கன் பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன், கடகடப்பான் கோவில்  மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி காவிரியிலிருந்து தீர்த்த எடுத்து வரப்பட்டு   முளைப்பாரியுடன் தீர்த்த குட  ஊர்வலமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விநாயகர் பூஜை, புண்யாக வாசனை, கலச ஆவாஹனம் முதல் கால யாக பூஜை, காயத்திரி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூரண ஹதி நடைபெற்று தீபாராதனையும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை வேத பாராயணத்துடன் மகாகணபதி, நவகிரக, குபேர மகாலட்சுமி, சுதர்சன மூலமந்திர ஹோமங்கள் நடைபெற்று, மகா கணபதி அபிஷேகமும்  அதனைத் தொடர்ந்து விநாயகர் மற்றும் மகா சக்தி மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு  தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டு மகா தீபாராதனையும் பிரசாதமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *