ranipet thipoosam

லாலாப்பேட்டை கிராம தைப்பூச பிரம்மோற்சவ பெருவிழாவில் திரளான பக்தர்கள் வள்ளி தெய்வானை சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை கிராமத்தில் பாசகுளம் அருகே அமைந்திருக்கும் வள்ளி தெய்வானை ஸமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 11-ஆம் ஆண்டு தைப்பூச பிரம்மோற்சவ பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பிரம்மோற்சவ பெருவிழாவை தொடங்கி  கடந்த 3 ஆம் தேதி கோவிலில் கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நடைபெற்றது பின்னர் நேற்று காலை கிராமத்தில் இருக்கும் பெண் பக்தர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடத்தை தலையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று தைப்பூச நாளை  முன்னிட்டு கோவிலில் இருந்த வேத பண்டிதர்கள் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அர்ச்சனைகள் நடத்தி ராஜா அலங்காரத்தில் வீற்றிருந்த வள்ளி தெய்வானை ஸமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திரளான பக்தர்கள் முன்னிலையில்  திருக்கல்யாண உற்சவம் நடத்தி மஹாதீபாரதனை காண்பிக்கப்பட்டது..

மேலும் கோவிலுக்கு வருகை தந்திருந்த  ஆயிரத்துக்கும் மேற்பட்ட  திரளான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *