annapoorani samedha aathma eeswara kumbabishegam

சென்னையை அடுத்த அம்பத்தூரில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான மேனாம்பேடு அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி சமேத ஸ்ரீ ஆத்மநாத ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோயில் வாமதேவ சிவாக்கிர யோகிகள் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ 28 வது குருமகா சந்நிதானம் மகாலிங்க தேசிக சுவாமிகள் தலைமையில் இந்த மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நேற்று காலை முதல் நடைபெற்று வந்த நிலையில்.

காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. அதனை தொடர்ந்து விமான கலசங்களுக்கு ஹோம புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. புதியதாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயமானது 36 தத்துவங்களை அடிப்படையாக கொண்டு, 3 நிலையாக பிரித்து அருவ, உருவ, அருவுருவ தத்ரூபமாய் . இந்த ஆலயம் புதியதாக விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *