varadharaja perumal temple sudharsana homam

வாலாஜாபேட்டை நகரத்தில் ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ராயாஜி அப்பண்ண பண்டிதரால் கட்டப்பட்ட திருத்தலமான  ஸ்ரீ பெருந்தேவிதாயார் ஸமேத வரதராஜ பெருமாள் கோவிலில் தை  மாத திருவோண 20-ஆம் ஆண்டு திருவிழா சுதர்சண ஹோமத்தில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வெங்கட்ரமண பாகவதர் தெருவில் ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ராயாஜி அப்பண்ண பண்டிதரால் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற திருத்தலமான ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸமேத வரதராஜ பெருமாள் ஆலயமானது அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில்  ஆண்டுதோறும் நடைபெறும் தை மாத திருவோணத் திருவிழா நிகழ்ச்சியானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் நேற்று இரவு திருவோணத்தையொட்டி கோவில் கருவறையில் இருந்த மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ திருமஞ்சனம் அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்பு அலங்காரத்தில் மூலவருடன் உற்சவரமூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார்.

அதனைத்தொடர்ந்து இன்று காலை முக்கிய நிகழ்வாக  காரியசித்தி குழந்தைப்பேறு , கடன் பிரச்சினை தீர்வு ,தொழில் முன்னேற்றம், குடும்பப் பிரச்சனை ,கல்விவளர்ச்சி பில்லி சூனியம் ஏவல் ஆகியவை விலகிட வேண்டும் என இந்த ஆலயத்தில் 20-ஆம் ஆண்டு தை மாத திருவோணத்தை முன்னிட்டு மஹா சுதர்ஸன ஹோமம் பூர்ணாவதி ஆகிய ஹோமங்கள் நடைபெற்றது.

இந்த சுதர்சன ஹோமத்தில் கலந்து கொண்ட  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரதராஜ பெருமாளை  கோவிந்தா!கோவிந்தா என முழங்கி பக்தி பரவசத்துடன் வழிபட்டுச் சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *