Thayagarajar Koil Arudhra Dharisanam

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி பாத தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகாரஸ்தலமாக விளங்குகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த கோவிலில் ஆண்டிற்கு 2 முறை தியாகராஜர் சாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திருவாதிரை திருவிழாயொட்டி பாத தரிசன விழா இன்று நடைபெற்றது.

விழாவையொட்டி தியாகராஜா சாமிக்கு திருவாதிரை திருவிழா மகா அபிசேகம் நடந்தது. அதனைதொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பாத தரிசனம் செய்தனர். பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *