Thiruninravur perumal

திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

ஆவடி அடுத்த திருநின்றவூரில் அமைந்துள்ள ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் பக்தவச்சல  பெருமாள் திருக்கோவில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது , இன்று காலை  5 மணிசிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு  தீப ஆராதனை செய்து சொர்க்கவாசல் வழியே சுவாமி வெளிய வந்ததும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பக்தி பரசுத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

மூலவர் சன்னதிக்கு பிரம்மாண்ட ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார், இதை காண பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்,  அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும் அன்னதானமும் கோவில் நிர்வாக சார்பாக வழங்கப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *