New year veeravazhi amman temple

2023 ம் ஆண்டு புத்தாண்டு முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள ஸ்ரீ வீரவாழியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நாடெங்கிலும் 2023 ம் ஆண்டு புத்தாண்டு முன்னிட்டு கொண்டாட்டத்தில் அனைவரும் ஈடுபட்டு மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர் .

அதில் ஒரு பகுதியாக விழுப்புரம் புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வீர காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .

2023 ஆம் ஆண்டு புத்தாண்டு முன்னிட்டு நாட்டு மக்கள் நலம் பெற வேண்டிய, நோய் நொடி இல்லாமல் வாழவும் பள்ளி படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் தொழில் வளர்ச்சி அடைய வேண்டுமென அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புது வருடத்தை முன்னிட்டு ஆலயங்கள் வந்து சாமி தரிசனம் செய்து இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என வேண்டி சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *