Margazhi nattiya nigazchi

மார்கழி மாதத்தை ஒட்டி பூந்தமல்லி அய்யப்பன் கோவிலில் சிறுமிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம். நேற்று முதல் மார்கழி மாதம் தொடங்கி உள்ள நிலையில் சபரி மலைக்கு விரதம் இருந்து மாலையிட்ட ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.

மேலும் மார்கழி உற்சவம் என்ற பெயரில் பல்வேறு கோவில்களில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஐயப்ப பக்தர்கள் பெருபாலோனோர் கோவில்களில் தங்கி  வருகின்றனர். இந்த நிலையில் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள சிறுமிகள் சிலரின் நாட்டிய நிகழ்ச்சி பூந்தமல்லியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. இதில் சிறுமிகள் நாட்டிய அரங்கேற்றத்தை நடத்தினார்கள். அப்போது பக்தி பாடல்களுக்கு சிருமிகள் பரதமாடியதை  கோவிலுக்கு வந்த பக்தர்களும், ஐயப்ப பக்தர்களும் பரவசமாக கண்டு களித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *