Iyappa bakthargal malar poojai

மதுரவாயலில் ஐயப்ப பக்தர்களுக்கான சிறப்பு மலர் பூஜை நடைபெற்றது. சென்னை மதுரவாயலில் உள்ள பிரசீதி பெற்ற புவனேஸ்வரி நாகாத்தம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஐயப்ப பக்தர்களுக்காக முதலாம் ஆண்டு சிறப்பு மலர் பூஜை நடைபெற்றது. இதில் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் எடுத்த சபரிமலை செல்ல உள்ள இந்த பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

இதில் ஐயப்பன் விநாயகர் முருகன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூஜையின் பொழுது ஐயப்ப சுவாமியின் காவலரான கருப்பண்ண சுவாமியின் பாடலான வாராரு வாராரு கருப்பசாமி பாடல் பாடிய பொழுது கருப்பசாமி வேடமிட்டு ஒருவர் ஆடினார் அதனைக் கண்ட ஐயப்ப பக்தர்கள் பரவசமடைந்து சுவாமி வந்து ஆடினர்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *