Bala vinayakar koil kumbabishegam

பாபநாசம் தாலுக்கா, ரெகுநாதபுரம் நெடுந்தெரு  கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலவிநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக  நடைபெற்றது.

ரெகுநாதபுரம் நெடுந்தெரு கிராமத்தின் அருள்மிகு பாலவிநாயகர் ஆலய பக்தர்கள் மற்றும் கிராமவாசிகள் உதவியுடன் திருப்பணி   நடைபெற்று வந்தது. திருப்பணி முடிவுற்ற நிலையில்  கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து   கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட  யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.  மேள, தாளங்கள் முழங்க அருள்மிகு பாலவிநாயகர் ஆலயத்தின் மகா  கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில்  கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம வாசிகள் செய்து இருந்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *