Iyappa Swamy Sirappu Alangaram

கலவை அருகே ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமி  திருக்கோவிலில் ஐயப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த  கே.வேளூர் கிராமத்தில்  ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமி பஜனை கோவிலில் இன்று காலை ஐயப்பன் உற்சவருக்கு பால், தயிர்,  சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்  தொடர்ந்து  நேற்று காலை  கோயில் அருகே யாகசாலை அமைத்து ஸ்ரீ கணபதி ஹோமம் நடைபெற்றது.

தொடர்ந்து கலசத்தில் உள்ள புனித நீர் மூலவருக்கும் உச்சவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது பின்னர், உற்சவர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பருக்கு  பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா கற்பூர தீபாரதனை காட்டப்பட்டது.தொடர்ந்து,மங்கள வாத்தியம், கேரளா வாத்தியம், வானவேடிக்கையுடன் உற்சவர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் திருவீதி உலா நிகழ்ச்சியானது நடைபெற்றது இதில் கிராம பொதுமக்கள் அவரவர் வீட்டு அருகே ஐயப்பன் சுவாமிக்கு மகா கற்பூர தீபாரனைக் காட்டி சுவாமியை தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *