Kudi irukkum veetil marangal

வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும். பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும். பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.

பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டித லையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் காவிரி நீரில் விடவும் பணப் பிரச்சனை தீரும். தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை  உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் பின்னர் முகம் மற்றும் தலையை துடைக்கவும் தரித்திரம் விலகும்.

தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர்  ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.ஆனால் விடாமல் முயற்சி செய்து பாருங்கள். அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.

குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் மஹாலஷ்மி கடாட்சம் ஏற்படும். தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு ஸ்துதி, விஷ்ணு சஹஸ்ரநாமம் கனகாதார ஸ்தோத்ரத்துடன் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்ய வாசம் செய்வாள். மஹாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபட வசிய முண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *