Thursday kubera poojai

எப்போதும் செல்வம் வீட்டில் நிலைத்து நிற்க ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையில் லஷ்மி குபேர பூஜை செய்யுங்கள். குபேர ஹோரையில் லஷ்மி குபேரரை வழிபட செல்வம் நிலையாக வரும்.

குபேர ஹோரை என்றால் என்ன ?
 
வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு உரிய நாள் என்பது போல், வியாழக்கிழமை குபேரருக்கு உரியது. அதிலும் வியாழக்கிழமை மாலை 5.00மணி முதல் இரவு 6.30மணிவரை உள்ள காலத்தை குபேர ஹோரை என்றே சொல்வார்கள்.  

இந்த நேரத்தில் குபேரனுக்கு குத்து விளக்கில் நெய் தீபமேற்றி, அதிரசம், பாயசம், கற்கண்டு, ஊறுகாய் வைத்து குபேரனை வழிபட்டால், கடன் தொல்லைகள் அகன்று, செல்வ பெருக்கம், குடும்ப சந்தோஷம் அதிகரித்தல் என நற்பலன்கள் அதிகரிக்கும் என்பார்கள்.

குபேர காயத்ரி மந்திரம்

ஓம் யஷ ராஜாய வித்மஹே
வைஷ்ரவணாய தீமஹி
தந்நோ குபேர ப்ரசோதயாத்.

108 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *