Vaikunda perumal bakthargalukku katchi

வாலாஜா‌பேட்டை வன்னிவேடு கிராமத்தில் முதலாம் பராந்தக சோழரால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வைகுண்ட பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் பராந்தக சோழர் மன்னரால் கட்டப்பட்ட  மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ வைகுண்ட பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆலயத்தில் மூன்றாம் புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் ஆகியவை நடைபெற்று சந்தன அலங்காரத்தில்  பக்தர்களுக்கு  பரவசத்துடன் காட்சியளித்து அருள் பாலித்தார்.

பிறகு கருவறையில் இருந்த ஸ்ரீ வரதராஜ வைகுண்ட பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆகிய சுவாமிகளுக்கு வேத பண்டிதர்  மந்திரங்கள் ஓதியபடி தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *