amirthakandeswarar temple pradhosham

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் பிரதோஷ வழிபாடு சுவாமி அம்மன் நந்தியம்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அலங்கார ஆராதனைகள் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் அபிராமி அம்மன் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன தொடர்ந்து கோபுர தீபம் கும்ப தீபம் மற்றும் ஷோடச உபசாரங்கள் நடைபெற்று உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து சுவாமி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பல்வேறு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன பின்னர் பிரதோஷ நாயகர்களை ரிஷப வாகனத்தில் எழுந்தருள செய்து கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்மன் நந்தி பெருமாளை வழிபட்டனர் .

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *