veetil selvam peruga

தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும். சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும். குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.

குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும். திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும். துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும். செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.

ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும். கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப் பெட்டியில் வைக்க பணம் சேரும். சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *