Thirupathy pournami garudasevai

திருப்பதி மலையில் குரு பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கருடசேவையில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வழிபட்டனர்.  திருப்பதி ஏழுமலையான் கோவில் பௌர்ணமி கருட சேவை  நடைபெற்றது.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் குரு பௌர்ணமி தினத்திலும் வழக்கம் போல் பௌர்ணமி கருட சேவை நடைபெற்றது.

 கருட வாகன சேவை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்பசாமி வாகன மண்டபத்தை அடைந்து தங்க கருட வாகனத்தில் எழுந்துருளினார்.தொடர்ந்து கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெற்றது.

குரு பௌர்ணமி என்பதால் வழக்கத்தை விட அதிக அளவிலான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் கருட வாகன சேவையை வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *