Karaikal ammayar thirukalyanam

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், கைலாசநாத சுவாமி நித்ய கல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்குட்பட்ட, காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு விழா நேற்று  மாலை ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலிலிருந்து மாப்பிள்ளை அழைப்புடன் நிகழ்வுடன் தொடங்கியது. இன்று காலை அம்மையார் மணிமண்டபத்தில் அம்மையார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மையார் குளக்கரைக்கு புனிதவதியார் எழுந்தருளினார்.

நாளை (புதன்கிழமை) பிச்சாண்டவ மூர்த்தி மற்றும் பஞ்சாமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் திருவீதியுலாவும், அதுசமயம் நேர்த்திக்கடனாக பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந் தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடக்கிறது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *