murugan vel

எந்த ஒரு தீய சக்தியும் வீட்டை நெருங்காமல் இருக்க வேல் ஒன்றைப் பூஜை செய்து வீட்டில் நிறுவினாலே போதும். வீடு மற்றும் வீட்டில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் அந்த வேல் பார்த்துக்கொள்ளும். ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற எந்த ஒரு பிரச்னையும் நம்மைத் தாக்காத அளவிற்கு அது நம்மைப் பாதுகாக்கும்.

இதற்கு ஒரு வேல் வாங்கிக்கொள்ள வேண்டும். அது பஞ்சலோகம், தங்கம், வெள்ளி, பித்தளை என எதுவாக வேண்டு மானாலும் இருக்கலாம். அவரவர் பொருள் வசதிக்கு ஏற்ப வேல் வாங்கிக்கொள்ளலாம். அந்த வேல் மீது சுத்தமான தண்ணீர் விட்டு கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய சொம்பில் விபூதி நிரப்பி அதில் வேலை சொருகி வைக்க வேண்டும். வேலுக்கு சந்தனம், குங்குமம், விபூதி போன்றவற்றை வைத்து பூப்போட்டு அலங்கரிக்க வேண்டும். தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு நேரமும்  சூடம் ஏற்றி முருகப் பெருமானை நினைத்து வணக்க வேண்டும். அந்த வேல் முன்பாக கந்த சஷ்டி கவசத்தை உரக்க படிக்க வேண்டும். தொடர்ந்து 27 நாட்கள் அந்த வேலுக்கு பூஜை செய்ய வேண்டும்.

27 நாட்கள் தொடர்ந்து பூஜை, கந்த சஷ்டி கவசத்தை வாய்பிட்டு கூறிய பிறகு, 28வது நாள் சொம்பில் உள்ள விபூதியை சிறிதளவு எடுத்து சுத்தமான மஞ்சள் துணியில் கட்டி உயரமான இடத்தில் தொங்க விட வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை ஆடியோ சிஸ்டத்தில் ஒலிக்க விடக் கூடாது. வாய்விட்டு சொல்வதன் மூலம் மட்டுமே வேலானது சக்தியைப் பெறும். 27 நாட்கள் தவறாமல் பூஜை செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப வெளியூர் பயணம் எதுவும் இருந்தால் பயணத்தை முடித்துக்கொண்டு தொடர்ந்து செய்ய வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் நம்முடைய வீட்டை உள்ள எதிர்மறை ஆற்றல்களில் மறையும். எதிர்மறை ஆற்றல் தோன்றாமல் அந்த வேல் 24 மணி நேரமும் நம்மை பாதுகாக்கும். அந்த வேல் விபூதி நிறைந்த அந்த சொம்பிலேயே இருக்கட்டும். பூஜை அறையில் அதை வைத்து வழிபட்டு வருவது நல்ல பலனைத் தரும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *