kadan prechinai kanamal poga

கடன் தீர சாஸ்திரத்தில் பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும்.

செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்னை நீங்கும்.

ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும்.

மைத்ர முகூர்த்தம் என்று ஒன்று உள்ளது, ( ஜென்ம நட்சத்திரம் முதல் 8-வது வரும் நட்சத்திரம் மைத்திர நட்சத்திரமாகும் ) இது ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு வரும்.

அதாவது அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும்போதும், அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போது யாரிடம் அதிக கடன்பட்டிருக்கிறோமோ அவரிடம் அசலில் ஒரு சிறிய பகுதியை கொடுத்தால் அந்த முகூர்த்த விசேஷம் காரணமாக, உங்கள் கடன் விரைவாக குறையும். குளிகை காலத்திலும் கடன் அடைக்கலாம், கரிநாள் உள்ள நாட்களிலும் கடன் அடைக்கலாம்.

மரணயோகம் உள்ள நாட்களிள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்த லாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.

தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லை நீங்கும். சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் சஷ்டி கவசம் படிக்க, கடன் நிவாரணம் ஏற்படும்.

ஓம் ஸ்ரீம் கம் ஸௌம்யாய கணபதியே வர வரத சர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா
ஹிருயாதி ந்யாஸ நிக்விமோக

என்ற இந்த மந்திரத்தை தினசரி 108 முறை நம்பிக்கையுடன் மனத்துள் ஜெபித்து வந்தால் ருண தோஷம் நீங்கும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *