kadan theerkum soorya graganam

கிரகணத்தை பொருத்தவரை பெரும்பாலும் எதிர்மறை பலன்களே அதிகம் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அதில் சில மிகப்பெரிய நன்மைகளையும் அடைய முடியும். பொதுவாக கிரகணத்தின் போது, கோயில்களில் ,நடை சாத்தபடுகிறது. கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது. உணவே ,தண்ணீரோ அருந்தக்கூடாது. தாம்பத்தியம்( உடலுறவு) கூடாது.  

என எதிர்மறையான அமைப்பில் பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் ,ஒரு சில மிகப்பெரிய நன்மைகளை அடையவும், கிரகண காலகட்டமே சிறந்தது என்பது முற்றிலும் உண்மை. பொதுவாக கிரகணத்தின்போது உச்சரிக்கப்படும் மந்திரச் சொற்களுக்கு பலமடங்கு சக்தி அதிகம்.

அந்த காலகட்டங்களில், உங்களுக்குப் பிடித்தமான தெய்வத்தின் காயத்ரியை கூறி ,வழிபட்டு வர மிகச்சிறந்த நன்மைகளை எதிர்பார்க்கலாம். குறிப்பாக அனுமன் சாலிசா படிப்பது மிகச் சிறந்த நன்மையை வாரி வழங்கும். நரசிம்மர் வழிபாடு நாளெல்லாம் சுகத்தை தரும்

 கிரகங்களில் மிக வலுவான கிரகம் கேது மற்றும் ராகுவே. தாந்த்ரீக பரிகார அடிப்படையில் கிரகணம் ஏற்பட்டு விலகும் காலகட்டங்களில், கழுத்தை நெறிக்கும் அளவிற்கு தீரா கடன்கள் இருந்தாலும், அந்த குறிப்பிட்ட நேரத்தில், கடனில் சிறு பகுதியை நீங்கள் கொடுத்தால், அந்த கடன் விரைவில் அடைபடும். இது சத்தியமான உண்மை.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *