Dhanvanthri maha abishegam

அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், மங்கள வாழ்வு தரும் மகிஷாசுரமர்த்தினிக்கு மஹா அபிஷேகம் 23.4.2022 முதல் 3.6.2022 வரை நடைபெறுகிறது.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 23.04.2022 சனிக்கிழமை முதல் 3.6.2022 வெள்ளிக்கிழமை வரை 41 நாட்கள் தினமும் காலை முதல் மாலை வரை அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், திருமணம் பாக்கியம் கைகூடவும், சந்தானம் பாக்கியம் பெறவும், தொழில் வியாபாரம் சிறக்கவும், தன ஆகர்ஷண மற்றும் ஜன ஆகர்ஷண பெருகவும், சகலவிதமான பயங்கள், தோஷங்கள் விலகி வாழ்க்கையில் வெற்றிகளை பெறவும், சர்வ மங்களம் பெற்று  மங்கள வாழ்வு பெறவும் மகிஷாசுரமர்த்தினிக்கு மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது.

தன்வந்திரி பீடத்தில் மகிஷாசுரமர்த்தினி:

ஸ்ரீ துர்காதேவியானவள் சூலினி துர்கா, வன துர்கா, சாந்தி துர்கா, ஜாதவேதோ துர்கா, தீப துர்கா, ஜ்வாலா துர்கா, ஆசுரீ துர்கா என்று வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான பெயர்களால் போற்றப்படுகிறாள். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 18 திருக்கரங்களுடன், சிரித்த முகத்துடன், மஹிஷனை வதம் செய்யும் கோலத்தில், 9 அடி உயரத்தில், 1008 பெண்கள் மஞ்சள் நீரினால் மஹா அபிஷேகம் செய்து, பல கோடி தன்வந்திரி மந்திரங்களை கொண்டு ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவ்வப்பொழுது சூலினி துர்கா ஹோமம், மஞ்சள் குங்கும அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் வருகிற 23.04.2022 சனிக்கிழமை முதல் 3.6.2022 வெள்ளிக்கிழமை வரை 41 நாட்கள் தினமும் காலை முதல் மாலை வரை ஹோம பூஜைகளுடன் தொடர் அபிஷேகம் நடைபெற உள்ளது. இங்கு நடைபெறும் ஹோமம், அபிஷேகம், மற்றும் பூஜைகளில் பங்கேற்று வழிபடுவதால் அசுர குணம் அழியும், தடைகள் நீங்கும், வியாதிகள் குணமாகும், பாவங்கள் விலகும், பயம் அகலும், சர்வ துக்கங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பக்கையாகும்.

பூஜைகளின் சிறப்பு

இப்பூஜையின் மூலம் கடன், சோகம், பிசாசு ஆகியவற்றால் பீடை உண்டாகாது என்றும், மேலும் சத்ரு, ரோகம், கடன் ஆகியவற்றால் உண்டாகும் பிரச்னைகள், ஆவி, பில்லி, சூனியம், ஏவல் முதலான அமானுஷ்ய சக்திகளால் உண்டாகும் தொல்லைகள், சித்த பிரமை, பரம்பரையில் ஏற்பட்ட சாபங்கள், நாக தோஷம், புத்திர தோஷம் விலகும்துர்கையின் பெயரை உச்சரிப்பதனாலேயே மனிதன் வம்ச விருத்தியையும், தன விருத்தியையும், சுபிக்ஷத்தையும் பெற்று மிகுந்த பாக்கியசாலி ஆகிறான் என்றும், ஸர்ப்பங்கள், ராக்ஷஸர்கள், பூதங்கள், சத்ருக்கள், ரோகங்கள் இவை யாவும் துர்கையின் பக்தனைப் பார்த்த மாத்திரத்திலேயே திசைதோறும் ஓடுகின்றன என்கிறது தேவி பாகவதம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *