varahi amman

வடக்கு திசைக்கு உரியவளான வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும் என்பர். தண்டநாத பீடமாக திகழும் திருச்சி திருவானைக்காவிலில் அம்மை ஜம்புகேஸ்வரி (அகிலாண்டேஸ்வரி அம்மை) வராஹி ஸ்வரூமாக திகழ்ந்து அங்கே நித்திய கன்னியாக குடி கொண்டுள்ளார். கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தய உன்னதமான நிலை. வராஹி என்ற பெயர் கேட்டாலே பலருக்கும் பயம் வரும். சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஒரு அம்பிகை பஞ்சமி தாயாக விளங்கும் வராஹி ஆவாள். பல்வேறு பஞ்சங்களையும், கஷ்டங்களையும் துரத்தி வாழ்வில் வரலாறு படைக்க வைப்பவள் வராஹி ஆவாள்.

வரலாறு படைக்கும் வராஹி :
அன்னை லலிதையால் பண்டாசுர வதத்தின் போது தோற்றுவிக்க அம்பிகையின் சக்தியால் அவள் உடலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள் சப்த கன்னிகள். ஆம், எப்படி கந்த கடவுள் சிவபெருமானிடம் இருந்து தோன்றினாரோ அது போன்று அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராஹ்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் வராஹி.

வராஹி அமைப்பு :
வராஹி மனித உடலும், வராஹ (பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலும், ஆதரவிலும் மழைக்கு நிகரானவள் இவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர (காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும்.

வராஹியின் பல்வேறு நாமங்கள் :
சேனநாதா, தண்டநாதா, வராஹி, பஞ்சமி, கைவல்யரூபி, வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி (நீதி தேவதை – ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, மகாசேனா, அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீயாகும்.

அஷ்ட வராஹிகள் :
ஸ்வப்ன வராஹி, அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி, லகு வராஹி, உன்மத்த வராஹி, லகு வராஹி, மஹிஷாரூட வராஹி, சிம்ஹாரூட வராஹி என  அஷ்ட வராஹிகளாக அழைக்கப்படுகின்றனர்.

வராஹிக்கு உகந்த நிறங்கள் :
பல வண்ண உடைகள் அணிபவள் (ஒவ்வொரு வராஹியும் நீலம், சிவப்பு, மஞ்சள் உடையாகும்).
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *