Pradhosha poojai abishega porutkal

சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வளர்பிறை சனிக்கிழமையில் வரக்கூடிய திரயோதசி திதிகள், சனி மஹாப்பிரதோஷம் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் 16.30 முதல் 18.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம், இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

பிரதோஷ பூஜையின்போது அபிஷேகப்பொருட்களால் விளையும் பலன்கள் :

பால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தயிர் – வளம் உண்டாகும்.

தேன் – இனிய சாரீரம் கிட்டும்.

பழங்கள் – விளைச்சல் பெருகும்.

பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்.

நெய் – முக்தி பேறு கிட்டும்.

இளநீர் – நல்ல மக்கட்பேறு கிட்டும்.

சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்.

எண்ணெய் – சுகவாழ்வு.

சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்.

மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்.
`

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *