Yogam tharu vasthu

வீட்டில் நாம் அதிக நேரம் வசிக்கும் அறைகளில் கடலில் இருந்து எடுத்த கிளிஞ்சல்களை வைத்தால் எதிர்மறையாக எண்ணங்கள் மறையும். 

எகிப்தில் இருக்கும் பிரமிடுகள் போல நான்கு பக்கமும் ஒரே அளவாக சதுரமாக இருக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கு உடல்நலம் தரும்.

வீட்டின் கிழக்கு பக்கமுள்ள அறையில் அதிக நேரம் வசிப்பவர்களுக்கு முக அழகு கூடும். கவர்ச்சியும் தரும்.

 கடின உழைப்பு, தியாக மனப்பான்மை, ஆராய்ச்சி செய்யும் அறிவு, விஞ்ஞான கண்ணோட்டம், உயர்நிலை பெரும் யோகத்தை பெற  வீட்டின் மேற்கு பகுதி உயரமாக அமைக்க வேண்டும். 

சூரியனின் ஒளிக்கதிகள் வீட்டின் எப்பகுதிகளிலாவது விழும்படி சன்னல், கதவுகளை அமைக்க வேண்டும். 

வீட்டின் சுற்றுப்புற சுவரின் மூலையில் எவ்விதமான கட்டிடமும் கட்டக்கூடாது. குறிப்பாக வடகிழக்கு, தென்மேற்கு மூலைகளை இணைத்து சிறிய கூடமோ கழிப்பறையோ கட்டக்கூடாது. அவ்விதம் கட்டினால் அந்த வீட்டின் உரிமையாளர்  அதில் வசிக்க இயலாது. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *