Dhoshangali nivarthi seiyum parigaram

நமக்கு கண்ணுக்குத் தெரிந்த தோஷங்கள் சிலவகை தான். அதற்கான பரிகாரத்தை செய்து விடுவோம். ஆனால், கண்ணுக்கே தெரியாத பல தோஷங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதன் மூலம், பாதிப்புகளும் அதிகமாகத்தான் இருக்கிறது. அதை குறைக்க என்ன செய்ய வேண்டும். சர்வ தோஷமும் நிவர்த்தி ஆக உங்களுக்கான பரிகாரம் இதோ

நாயுருவி குச்சி என்று நாட்டு மருந்து கடைகளில் கேட்டுப்பாருங்கள் கிடைக்கும். இது பொதுவாகவே எல்லா இடங்களிலும் வளரக்கூடியது தான். அந்தக் குச்சியில் முள்ளிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதை உங்களுக்கு சரியான முறையில் பார்த்து, அடையாளம் கண்டுபிடித்து, எடுக்க முடியாது என்பதால் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்வது நல்லது.

அந்த குச்சியை வாங்கி சிறிய துண்டு, இரண்டு இன்ச் அளவு உடைத்து, மஞ்சள் நிறத் துணியில் வைத்து, ஐந்து வண்ண நூலை கொண்டு கட்ட வேண்டும். எப்படி வேண்டும் என்றாலும் உங்கள் சௌகரியத்துக்கு கட்டிக்கொள்ளுங்கள். ஆனால், நிறம் மட்டும் மஞ்சள் நிறத் துணி, நூல் ஐந்து வண்ண நூல். வர்ணம் உங்க இஷ்டம் தான்! ஒரு கருப்பு நிற நூல் மட்டும் கட்டாயம் இருக்க வேண்டும். மற்ற நான்கு நிறங்கள் வேறு எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். இந்த முடிச்சை கட்டி தயார் செய்து பூஜை அறையில் வைத்து விட்டு, ஒரு தீபம் ஏற்றி பின்வரும் மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள்! உங்களுக்கான மந்திரம் இதோ!

ஓம் ஹரி ஹரி சிவ சிவா
ஹரி ஓம் சிவா!

அதன் பின்பாக, இந்த முடிச்சை உங்கள் பாக்கெட்டிலோ அல்லது பார்சிலோனா வைத்துக்கொள்ளலாம். சிறிய அளவில் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். 48 நாட்கள் இதை உங்கள் கைகளிலேயே வைத்துக் கொண்டிருந்தால், கண்ணுக்குத் தெரியாத எந்த தோஷமாக இருந்தாலும் அது நிவர்த்தி ஆகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *