Thiruchendur murugan dharisanam

திருச்செந்தூரில் ஒரு தின உபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்ல. திருச்செந்தூர் முருகனை நாம் தரிசிக்க செல் லும் பொழுது இறங்கி தான் செல்ல வேண்டும் தரிசித்துவிட்டு வரும்பொழுது ஏறித்தான் வர வேண்டும். இதுஎதை குறிக்கிறது என்றால் நாம் கந்தனை தரிசிக்க எவ்வளவு இறங்கி சென்றாலும் தரிசித்த பின்பு நம் வாழ்க்கையில் என்றும் ஏற்றம்தான் இருக்கும் என்று உணர்த்துகிறது.

திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி, சண் முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். சுப்பிரம ணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார் இதனால் இத்தலத்துக்கு வீரபாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரபாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவ ருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

மூலவர் சுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும். மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங் கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்ப றை என்றும் ஒரு பெயர் உண்டு. 

திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்பு ள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.  திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள். 

திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரம் ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது. 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *