deviyai magihavaikku kriya shakthi vazhipadu

ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்.

கொலு வைப்பதால் பெண்களின் மன இறுக்கம் தளர்ந்து லேசாகிறது. டெல்லியிலும், காசிக்கு அருகிலுள்ள ராம் நகர் உத்தரபிரதேசம் போன்ற இடங்களிலும் ‘ராம்லீலாÕ நடத்த பெரிய, தனியான திடல்களே உள்ளன. ஸ்ரீராமனது காவியத்தை பத்து அல்லது முப்பது நாட்கள் நாடகமாக நடிக்கின்றனர்.

சிறு துளசிக்கன்றை களிமண்ணோடு கொண்டு வந்து கொலுவில் வைத்து தீபாராதனை காட்டுவது ஆனந்தத்தை அதிகப்படுத்தும். நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.

நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும். அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *