Sani pradhosha sirappugal

ஏனெனில் சிவபெருமான், தேவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே பிரதோஷ நேரம் சனிக்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பது முக்கோடி தேவர்கள் பிரம்மா, விஷ்ணு அனைவரும் வணங்கிஆசி பெறுவார்கள். அவர்களைப் போலவே பிரதோஷ நேரத்தில் நாமும் சிவபெருமானை வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக்கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

பிரதோஷதின் மகிமை :

எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிர தோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசு வின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந் தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். அதேபோல் நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்ட ம சனி, கண்ட சனி, அஷ்டமச்சனி ஆகியவற் றால் பாதிக்கப்படுபவர்கள், சனி பிரதோஷ வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் சனீ ஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பங் கள் நீங்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *