Kavanikka vendiya suba horaigal

தினம்தோறும் நாம் ஒரு செயலை ஆரம்பிக்கும் பொழுது எல்லாம் வல்ல கணநாதர், ஓம் ஸ்ரீ மகா கணபதியே தொழுது செயலை துவங்குகிறோம். நாம் செய்யும் செயல் இனிதே தடையின்றி செய்வதற்கு ஒரு நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து நாம் துவங்குகிறோம்.

 நல்ல நேரம் என்பது ஒரு நாளில், சுப கோள்கள் ஆளுமை செய்யும் நேரம் ஆகும். ஒரு வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகம் ஆளுமை செய்கிறது.  ஞாயிறு, திங்கள்,  செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற குறிப்பிட்ட அமைப்பில் இந்த நாட்கள் வருகின்றன இன்றைய காலகட்டத்தில் நாம் அனைத்து செயல்களுக்கும் இந்த ஏழு நாட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துகின்றோம் .

இந்த நாட்களை… கிழமைகளை எவ்வாறு வகுத்துள்ளனர் ?
இன்று ஞாயிற்றுக்கிழமை என்றால் இன்றைய தினம் முழுவதும் சூரிய பகவானின் ஆளுமைக்கு உட்பட்டு இருக்கின்றது. ஆகவே இன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமை என்கிறோம். அதேபோல திங்கட்கிழமை என்றால் அன்றைய தினம் சந்திர பகவானின் ஆதிக்கம் முழுமையாக உள்ள நாளாகும்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுமைக்குள் கொண்டு நமது வாழ்க்கையில் அனைத்து செயல்களும் நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள் என்பது எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டது என்றால் நாம் சிவன் கோவிலில் பார்க்கும் நவகிரகம் ஒன்பது கிரகங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

சூரியன், சந்திரன் ,செவ்வாய் ,புதன் ,குரு ,சுக்கிரன், சனி பகவான் ,ராகு பகவான், கேது பகவான் ஆகிய ஒன்பது கோள்களும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி அமைக்கப் பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம் . இந்த ஒன்பது கிரகங்களில் ராகு கேது கிரகங்கள் நிழல் கிரகங்கள் என்று கூறப்படுகிறது .

மற்ற 7 கிரகங்கள் வானமண்டலத்தில் வலமாகவும் இந்த இரண்டு நிழல் கிரகங்கள் வான மண்டலத்தில் இடமாகும் தனது சஞ்சாரத்தை செய்துகொண்டு இருக்கின்றன. இந்த ஒன்பது கிரகங்களில் ராகு கேது கிரகங்களுக்கு தனியாக ராசி கொடுக்கப்படவில்லை. ராசி மண்டலத்தில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் மீதமுள்ள ஏழு கிரகங்கள் தனது சொந்த வீடுகளாக கொண்டுள்ளன .இங்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் கிரகங்கள் தங்களுடைய வீட்டின் அதிபதியாக உள்ளனர்.

ஒரு நாளில் 24 மணி நேரம் உள்ளது. ஒரு நாளில்  ஒவ்வொரு மணி நேரமும் ஒரு கிரகத்தின் ஆளுமையில் இயங்குகிறது.நல்ல நேரம் என்பது சுபஹோரை என்று அழைக்கப்படுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *