Palani malai sirappugala

தண்டாயுதபாணிசுவாமி விக்ரகத்திற்கு  5 விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி பன்னீர். இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது.

அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம். ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபா ணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகி றது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்து விடும்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. தினமும் ஆறு காலங்களில் தண்டாயுதபாணி சுவாமி ஆறு அலங்காரத்தில் காட்சி தருகிறார்.

விளாபூஜை= காலை 6.40 மணிக்கு சன்யா சி அலங்காரம்.
சிறுகாலசந்தி = காலை 8 மணிக்கு  பாலசு ப்ரமணியா் அலங்காரம்.
காலசந்தி = காலை 9 மணிக்கு  பாலசுப்ர மணியா் அலங்காரம்.
உச்சிகாலம் = பகல் 12 மணிக்கு வைதிகாள் அலங்காரம்.
சாயரட்சைபூஜை =  மாலை 5.30 மணிக்கு 
 இராஜ அலங்காரம். அா்த்தஜாம பூஜை = இரவு 8 மணிக்கு  புஷ்ப அலங்காரம்.

இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத் திலும் சாத்தி கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம். அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் இதுவரை ஒருபோதும் வெளியே உணர்ந்திராத பரவி நிற்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *