Maandhi endha gragam inaindhal enna badhippu

கிரக இணைவு: மாந்தியுடன் எந்த கிரகம் இணைகிறதோ அதன் உறவுமுறை பாதிக்கப்படும். எடுத்துக்காட்டாக 

மாந்தியுடன் சூரியன் சேர்ந்தால் அல்லது ஒன்பதாம் இடத்தில் சேர்க்கை பெற்றால் – தந்தைக்கு பிரச்னை அல்லது கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும்.  அதேபோல் சந்திரன் உடன் மாந்தி இணைந்தால் அம்மா அல்லது மாமியாருக்கு பாதிப்பு. அதுவே 

சுக்கிரனோடு சேர்ந்தால் மனைவிக்கு உடல்நலத்தில் பிரச்னை ஏற்படுத்தும் கணவனை வேறு ஒருவேரோடு உறவை ஏற்படுத்தும். பெண்ணுக்கு ஜாதகத்தில் இவ்வாறு இருந்தால் கணவனுக்கு பாதிப்பு மாறுபடும். 

இராகு, கேதுவுடன் சேர்ந்தால் நெருப்பு, விஷம் ஆகியவற்றால் மரணம் அல்லது அதற்கு நிகரான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் கிரகம் மற்றும் பாவக கிரகத்தோடு ஆராயவேண்டும்.

ஜாதகத்தில் மாந்தி எங்கெங்கு பார்க்கிறாரோ தோஷத்தை ஏற்படுத்துவார் ஒருசில நூல்களில் மாந்திக்கு பார்வை 2, 7, 12ம் இடம் என்று கூறப்படுகிறது. மேலே கூறிய அனைத்தும் அவரவர் கிரக நிலையை, அவற்றின் பலத்தைக் கொண்டும், சுப கிரக பார்வை பலன் பார்த்துக் கூறவேண்டும்.
 
மாந்தியால் ஏற்படும் மனை தோஷம், புத்திர தோஷம், பிரேத சாபம், திருமணத் தடை, குடும்ப தோஷம் தீர சனிக்கிழமை அல்லது அவரவர் நட்சத்திர நாட்களில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், சனி பகவான் தன் குடும்பத்துடன் காட்சி தரும் திருநறையூர், மற்றும் உங்கள் அருகில் இருக்கும் மாந்தி இருக்கும் கோவிலுக்குச் சென்று உங்களால் முடிந்த பரிகாரங்களைச் செய்து தோஷ நிவர்த்தி செய்யவும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *