Palani murugan adisayam

கார்முகில், ரச செந்தூரம், லிங்கம், குதிரைப் பல், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளைக்கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த பழனி முருகன் சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாக தேடியபோது, அதற்கு பொருத்தமான இடம் இந்த பழனிமலை என்பதை தேர்வு செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.

நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சம்!.. அந்த வியர்வை பெருக்கெடுத்து ஆறாக ஓடும்! அந்த ஒவ்வொரு வியர்வைத்துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது.

அதனால்தான், இங்கு தினந்தோறும் ராக்கால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம் பூசப்படும். மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப்படும். மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும்போது, அந்த சந்தனத்தில் வியர்வைத்துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

கீழே வைக்கப்பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப்படும்.இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள். இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம். இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அரு மருந்தாகக் கருதப்படுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *