Varahi amman vazhipadu

சப்த மாதர்களில் வாராகி அம்மன் உக்கிரமான தெய்வமாக பார்க்கப்பட்டாலும் அன்பை பொழிவதில் அன்னைக்கு நிகரானவள். வாராகி காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வணங்கினால் கேட்ட வரங்களை கொடுப்பவள். வாராகி அம்மன் ராஜ ராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படைத்தலைவியாகவும், பத்மாவதி அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

வராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணியில் இருந்து முதல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், மண் அகலில் கருநீல துணியில் திரி செய்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனதார வேண்டினால் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம். கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே வராகி அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வந்தாலும் இழந்த செல்வங்களை பெறலாம்.

வேண்டிய வரம் கிடைக்கும்
ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரி வழிபாட்டின் போது பஞ்சமி திதியில் வாராகி தேவியை வழிபடலாம். மாத பெளர்ணமி, அமாவாசை மிகவும் மிகவும் சிறப்பானது. வாராகி மாலை படித்தால் அனைத்து துன்பங்களும் நம்மை விட்டு அகலும். இரவு 10 அல்லது 11 மணியளவில் மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும் வாராகியை மனம் உருகி வேண்டினால் கேட்பவை அனைத்தும் கொடு‌க்கு‌ம் தெய்வமாக நின்று துணை நிற்கும்

தஞ்சை பெரிய கோவிலில் வாராகி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். மாமன்னர் ராஜாராஜசோழன் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார். இங்கு வாராகி அன்னை தனி சன்னதி கொண்டு வீற்றிருக்கிறார். 

மாலை நேரத்தில் வாராகி அம்மனுக்கு கிழக்கு வகைகளை படைத்து வழிபடு சிறப்பானது. சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் வாராகி பீடமாக போற்றப்படுகிறது. திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இருகரங்களில் தண்டத்தினையும் கலப்பையையும் கொண்டவர். இவர் கருப்புற நிற ஆடையுடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வாராகியை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்தும் காப்பாற்றுவாள். நினைத்த காரியம் நிறைவேறும். திருமணத்தடைகள் விலகும், புத்திரபாக்கியம் கிடைக்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *