Somavara pradhosham

திங்கள் கிழமை வரும் பிரதோஷம் சோமவார பிரதோஷமாகும். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. 

பிரதோஷ காலம் :

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்கு தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் ,மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.

சோமவார பிரதோஷம் :

சோமவார பிரதோஷ பூஜையின் மூலம் திருமண தடை நீங்கும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம், ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும், போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும். சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். .ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *