budhan bagavan theppa urchavam

சீர்காழி அருகே திருவெண்காடு புதன் பகவான் கோயில் தெப்ப உற்சவம், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி அருகே  திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வர கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.நிகழாண்டு இந்திரப்பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம்  23ம் தேதி தொடங்கியது. 

விழாவின் 12 ஆம் நாள் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தெப்போற்சவத்தை முன்னிட்டு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினர். இதனை அடுத்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தெப்பம் புறப்பட்டு திருக்குளத்தை 4 முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *