sholingur narashimmar

சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் மூன்று நாள் தவன உற்சவம் இன்று துவங்கி யது வீதிகளில் வீடுகள் தோறும் திரளான பக்தர்கள் தீபாராதனை செய்து வழிப்பட்டனர்.

சோளிங்கர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருகோவிலில் மாசி மாத மூன்று  நாள் தவன உத்சவம் முன்னிட்டு கோவில் விடியற்காலையில் நடை திறக்கப்பட்டு பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை அலங்காரம் செய்யப்பட்டு மகா  தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் ஊர் கோவிலில் இருந்து பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமி கிளி கூண்டில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார் .ஊர்கோவிலில் இருந்து  ஊர்வலமாக  சென்று கொண்டபாளையத்தில் உள்ள யோக ஆஞ்சநேயர் கோவில்  நந்தவனத்தில் அமைந்துள்ள தவன உற்சவ மண்டபத்தில் பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பின்னர் தொடர்ந்து திருமஞ்சனம் ஊஞ்சல் சேவை  நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமியை வழிப்பட்டனர்.அனைவருக்கும்  அன்னதானம் வழங்கினார்கள்…

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *